136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியா பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாது என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2018-2019ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு இந்தியா கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அடிலெய்டில் முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டி நடைபெறவுள்ளநிலையில் இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பகலிரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு இந்தியா பெரிதாக ஆதரவு அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுமா என்பது கேள்விக் குறியேயாகும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love