குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ரவி கருணாநாயக்கவிற்கு எந்தவிதமான பதவிகளும் வழங்கப்படவில்லை.
ரவி கருணாநாயக்க மற்றும் விஜயதாக ராஜபக்ஸ ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. விஜயதாச ராஜபக்ஸவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போதிலும், ரவி கருணாநாயக்கவிற்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது சிலர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.