குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் ஊழல் எனத் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் சிலர் இன்று(01) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
கிளிநொச்சி டிப்போ வீதியில் கனகபுரம் பகுதியிpல் இயங்கி வருகின்ற வன்னிமாற்று திறனாளிகள் காப்பகம் மாற்றுத்திறனாளிகளுக்கு புலம் பெயர் நாடுகளிலிருந்து வருகின்ற நிதி மற்றும் உதவித்திட்டங்களை முறையாக பயன்படுத்துவது இல்லை என்றும், முறைகேடான வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்து மாற்றுது்திறனாளிகள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
அத்தோடு இவ்வமைப்பின் முறைகேடுகளை தட்டிக்கேட்ட நிர்வாகத்தில் இருக்கின்ற உபத்தலைவர் உள்ளிட்ட சிலரை அமைப்பின் பணிப்பாளராக செயற்படுகின்றவர் தன்னிச்சையாக பதவிகளில் இருந்து நீக்கிவிட்டதாகவும், மேலும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் இவ்வமைப்பின் உப தலைவர் இது தொடர்பில் தான் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடா்பில் இவ்வமைப்பின் பணிப்பாளர் தென்னகோண் சரத் என்பவரை தொடர்பு கொண்டு வினவிய போது தங்கள் அமைப்பில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என்றும் முறையான கணக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும். தெரிவித்த அவர் உப தலைவர் உட்பட சிலர் நிர்வாக நடவடிக்கைகளுக்கு முரணாக நடந்துகொண்டமையினால் விலக்கப்ட்டதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை வன்னி மாற்றுத்திறனாளிகள் காப்பகம் ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பாக செயற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.