Home சினிமாதல என ரசிகர்களால் கொண்டாடப்படும்அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

தல என ரசிகர்களால் கொண்டாடப்படும்அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

by admin


பிரபல நடிகர் அஜித்தின் தனது 47வது பிறந்த நாள் இன்றாகும். அவருக்கு திரையுல பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். டுவிட்டர் முதலிய சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தொலைக்காட்சிகள் வழியாகவும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர் அஜித் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த  நடிகர் ராகவா லாரன்ஸ்  அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பாளிகளுக்கு சிறந்த இன்ஸ்பிரேஷன் அளிக்கும் அஜித்திற்கு பிறந்த வநாள் வாழ்த்த்துக் கூறியுள்ளார் நடிகர் சதீஷ் இதேவேளை நான் வியக்கும், மதிக்கும் மனிதர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார்  என டுவிட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை பியா பாஜ்பாய்.

தங்க மனசுக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்  என கூறியுள்ள  இசையமைப்பாளர் இமான்  உங்கள் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சி என்றும் விஸ்வாசத்தை நினைத்து மகிழ்ச்சியாகவும், திரில்லாகவும் உள்ளது என்றும் தனது வாழ்த்தில் கூறியுள்ளார்.

இதேவேளை, நடிகர் நிவின் பாலி,  இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை காஜல் அகர்வால், நடிகை ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா, இயக்குனர் சுசீந்திரன், இயக்குனர் வெங்கடேஷ், நடிகர் ஸ்ரீமன், நடிகர் இய்ககுனர் மனோபாலா, நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More