காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் மாநிலம் முழுவதும் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் காஷ்மீரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவவீரர்களுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 2 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் இந்த சம்பவத்தின் போது, ராணுவவீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்களில் ஒருவரும் உயிர் இழந்திருந்தார்.
இந்தநிலையில் பிரிவினைவாதிகளும்; இளைஞரும் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் மேற்கொண்டிருந்தன.
இதனால் தலைநகர் ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுக் காணப்பட்டிருந்ததாகவும் பாடசாலைகள் , கல்லூரிகளும் இயங்கவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகளின் சேவைகள் முடங்கிக் காணப்பட்துடன் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா, குல்காம் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் பதற்றமான இடங்களில் ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டு இருந்தது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது