Home இலங்கைமன்னார் to கொழும்பு அரச பயணிகள் பேருந்தும் ஒரு தொகுதி முருங்கக்காய் மூடைகளும்…

மன்னார் to கொழும்பு அரச பயணிகள் பேருந்தும் ஒரு தொகுதி முருங்கக்காய் மூடைகளும்…

by admin

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை(01.05.18) இரவு 9.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணிகள் ஆசனங்களில் அதிகளவான முருங்கக்காய் மூடைகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், இதனால் குறித்த பேரூந்தில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கான பேரூந்து, மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு கொழும்பு நோக்கி செல்வது வழமை.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (1) இரவு தலைமன்னாரில் இருந்து (WP-NB-8927) எனும் இலக்கம் கொண்ட பேரூந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் ஒரு தொகை முருங்கக்காய் மூடைகளையும் பேரூந்தில் ஏற்றிக்கொண்டு மன்னார் சாலை நோக்கி சென்றுள்ளது.

இந்தப் பேரூந்தின் பின் கதவு முழுமையாக மூடப்பட்டு ஆசனம் உட்பட பின் பகுதியில் அதிகலவான முருங்கக்காய் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் முன் கதவிற்கும்,சாரதியின் ஆசனத்திற்கும் இடையிலும் ஒரு தொகுதி முருங்கக்காய் மூடைகள் ஏற்றப்பட்டிருந்தன.

இதனால் குறித்த பேரூந்தில் ஆசன பதிவுகளை மேற்கொண்ட மற்றும் தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும, அது குறித்து பேருந்தின் நடத்துனருடன் கதைத்த போது கடும் போக்கில் செயற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More