குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முகநூல் நிறுவனம் பாரிய நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முகநூல் நிறுவனத்தின் எப்-8 டெவலப்பர் மாநாடு இம்முறையும் நடைபெறவுள்ளது. இம்முறை நிகழ்வில் உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 5000 டெவலப்பர்கள் பங்கேற்க உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் வேர்சுவல் ரியலிட்டி போன்ற விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது. முகநூல் நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இந்த டெவலப்பர்கள் கலந்துரையாட உள்ளனர்.
முகநூல் நிறுவனம் பாரியளவில் பயனர்களின் தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.