இலங்கை பிரதான செய்திகள்

எந்தவொரு எருமையினாலும் அரசாங்கத்தை வழிநடத்த முடியும் – ஜீ.எல்.பீரிஸ்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எந்தவொரு எருமையினாலும் அரசாங்கத்தை வழிநடத்த முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எந்தவொரு எருமையினாலும் யுத்தம் செய்ய முடியும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல ஒரு காலத்தில் கருத்து வெளியிட்டிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ள அவர் எவ்வாறெனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்து யாராலும் உலகில் செய்ய முடியாத சாதனையை நிலைநாட்டிக் காட்டியிருந்தார் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது நாம் கூறுகின்றோம் எந்தவொரு எருமையினாலும் அரசாங்கத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய சூழ்நிலை தற்பொழுது உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு வானளவு உயர்ந்துள்ளதாகவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் எரிவாயு விலை உயர்த்தப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.