குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனா தமது நட்பு நாடுகளை பணம் கொடுத்து திசை திருப்புவதாக தாய்வான் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தாய்வானின் நேச நாடான டொமினிக்கன் குடியரசுகளுக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளது. கடன் மற்றும் முதலீடு என்ற அடிப்படையில் சீனா, டொமினிக்கன் குடியரசில் 3.1 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
தாய்வானுடனான உறவுளை துண்டிக்கும் நோக்கிலேயே இவ்வாறு டொமினிக்கன் குடியரசிற்கு சீனா உதவியாகதாகத் தாய்வான் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, நிபந்தனை அடிப்படையில் டொமினிக்கன் குடியரசிற்கு உதவவில்லை என சீனா தெரிவித்துள்ளது.
தாய்வான் சீனாவின் ஓர் உள்ளக மாகாணம் எனவும், ராஜதந்திர மட்டத்திலான உறவுகள் குறித்து கருத்து வெளியிடும் தகுதி தாய்வானுக்கு கிடைக்காது என சீனா தெரிவித்துள்ளது.