குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதியோப்பாவில் மின்சாரத்திற்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை காணப்படுகின்றது. பாரிய நீர் மின் விநியோகத்திட்டத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மின்சாரத்தை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தென் எதியோப்பியாவில் அமைந்துள்ள கிபி 3 என்னும் நீர் மின் திட்டத்தினால் அந்நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இயந்திரக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டின் பல பகுதிகளிலும் இன்னமும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நைல் நதியை அண்டிய பகுதியில் எதியோப்பியா மற்றுமொரு பாரிய நீர் மின் திட்டமொன்றை ஆரம்பிக்கப்பட உள்ளது.