மும்பையை சேர்ந்த புலனாய்வு பத்திரிக்கையாளர் ஜோதிர்மாய் டே கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சோட்டா ராஜன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குறித்த பத்திரிகையாளர் சோட்டா ராஜன் பற்றிய கட்டுரைகளை எழுதியமைக்காக கடந்த 2011-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்த கொலை வழக்கில் சோட்டா ராஜன், பெண் நிருபர் ஜிக்னா வோரா உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டநிலையில் 2016 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன் இந்தியா கொண்டுவரப்பட்டார்.
சோட்டா ராஜன் அளித்த வாக்குமூலத்தில் நிழல் உலக தாதா தாவூத்துடன் நெருக்கம் காட்டியதால் பத்திரிகையாளரை கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட தீர்ப்பில் சோட்டா ராஜன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.