குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
பத்திரிக்கை விற்பனையை நோக்கி சென்றதில்லை கடந்த போராட்ட காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதால் தான் பத்திரிக்கை கொண்டு நடத்த முடிந்தது. என நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குனருமான ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
எமது ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சில நிமிடங்களில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார். அதன் போது அவர் சொன்னார் உங்கள் ஊடக நிறுவனத்தில் அசம்பாவீதம் நடைபெற்றதாக தகவல் கிடைத்தது. நாளைக்கு சர்வதேச ஊடகவியாளர்கள் பண்டாரநாயக்க ஞாபர்கத்த மண்டபத்தில் கூடுகின்றார்கள். அதனால் என் மீது கரிபூச விடுதலை புலிகள் தாக்குதல் மேற்கொண்டு உள்ளார்கள் எங்கள் ஆட்கள் தேடுகின்றார்கள் ஒருவரை கைது செய்து விட்டார்கள் என எனக்கு கூறினார்.
தாக்குதல் தொடர்பிலான வழக்கினை ஆரம்பிக்குமாறு கோரியுள்ளேன். என்னிடம் நான்கு சாட்சியங்கள் உள்ளது. அதில் மூன்று தற்போது உள்ளது. அதேவேளை தாக்குதல் சம்பவத்தில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு ஏற்காது உடனடியாக பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.அதற்கான ஆதாரங்கள் உண்டு.
மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால் விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபகரனால் சான்றிதழும் வழங்கப்பட்டது. இடப்பெயர்வுகளின் போது எத்தனையோ இலட்ச மக்களை இணைத்தோம்.
பத்திரிக்கை விற்பனையை நோக்கி சென்றதில்லை கடந்த போராட்ட காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதால் தான் பத்திரிக்கை கொண்டு நடத்த முடிந்தது.
நாங்கள் எங்கள் பத்திரிகையில் உணர்வு பூர்வமான தலைப்பிட்டே மக்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தோம். இன்றும் எங்கள் ஆசிரியர் பீடக் கொள்கைகள் தேசியத்தில் இருந்து விலகவில்லை. தேசியம் பற்றி தெளிவாக உள்ளார்கள். என மேலும் தெரிவித்தார்.