குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆர்மானியாவில் அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்மானியாவின் புரட்சித் தலைவர் நிகோபல் பசிங்கன் ( Nikol Pashinyan) தலைமையிலான தரப்பினர் நாடெங்கிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆர்மானியாவின் அரச தலைவர் செர்ஸ்க் சர்க்சியான் ( Serzh Sargsyan ) ஐ பதவி விலகுமாறு கோரியே இவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்களை முற்றுகையிட்டும் வீதிகளை மறைத்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போரட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணங்களை தொடர முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.