159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் தொடர்பில் எதிர்வரும் 10ம் திகதி பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8ம் திகதி பாராளுமன்றில் உரையாற்ற உள்ளநிலையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்கம் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 10ம் திகதி இந்த விவாதம் நடத்தப்பட உள்ளது.
Spread the love