183
நடிகர் தன்னுடைய 62ஆவது படத்தை தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தப் படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படத்தை இயக்க தயாராக இருப்பதாக பிரபல இயக்குநர் ஏ.எல். விஜயத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜய், நடிகர் விஜய்யின் சம்மதத்துக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இயக்குனர் விஜய் தாண்டவம், மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் முதலிய படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் 2013இல் வெளியான படம் ‘தலைவா’. இந்தப் படத்தில் விஜய்-அமலாபால், சந்தானம் உட்டபட பலர் நடித்தனர். அத்துடன் இப் படம் பல தடைகளை கடந்து திரைக்கு வந்தது.
‘தலைவா-2’ படத்துக்கு கதை தயாராக இருப்பதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கும் இந்த விடயம் தெரியும் என்றும் அவர் ‘ஓ.கே’ சொன்னால் படத்தை ஆரம்பித்து விடுவேன் என்றும் இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, விஜய்யின் அடுத்த படத்தை இய்ககுவது யார் என்று முன்னணி இயக்குநர்களிடையே கடும் போட்டிய நிலவி வருகிறது. விஜய் அடுத்ததாக எந்த இயக்குநருடன் இணையப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.
Spread the love