213
ஊடக சுதந்திர தினமான இன்று ஊடகப் போராளிகளை நினைவு கூறும் நிகழ்வு றக்கா வீதியில் அமைந்துள்ள ஆட்கலறி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சற்றர்டே ரிவூயூ பத்திரிகையின் ஆசிரியர் அமரர் காமினி நவரட்ண மற்றும் சற்றர்டே ரிவூயூ பத்திரிகையின் ஊடகவியலாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான ஏ.ஜே.கனகரத்தினா ஆகியோருக்கான நினைவேந்தல் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்கள், ஊடக மாணவர்கள், அரசியல் வாதிகள், சமயப் பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டு அவர்களுக்கான அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். இந் நிகழ்வில் இருவருடைய வாழ்ககை வரலாறு, ஊடகப் பணி தொடர்பில் அதிதிகளின் பேச்சுக்களும் இடம்பெற்றன.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love