குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
எடா குறித்த நிலைப்பாட்டில் மாற்றங்கள் கிடையாது என ஸ்பெய்ன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஸ்பெய்னின் பிரதமர் மரியானோ ராஜோய் இதனைத் தெரிவத்துள்ளார். எடா கிளர்ச்சிக்குழுவில் இணைந்து கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படும் வரையில் இடம்பெற்ற மோதல்களில் எடா, 800க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்துள்ளது. எடா தற்பொழுது எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்காது என பிரதமர் தெரிவித்துள்ளார்.