Home இலங்கைஅமைச்சரவை மாற்றம் ஐ.தே.கவை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது…

அமைச்சரவை மாற்றம் ஐ.தே.கவை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

 
அமைச்சரவை மாற்றம், ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தந நடவடிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பலவீனமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக நலன்புரி, தொழில் உறவுகள் உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் சுதந்திரக் கட்சி மேலும் பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டின் அரசாங்கம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரனை அரசாங்கம் நாட்டுக்கு கொண்டுவர முயற்சி எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More