நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் ஜூன் 06ம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த போது அந்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ நிகழ்வொன்று இன்று இடம்பெற இருப்பதால் வழக்கை பிற்போடுவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.