Home உலகம்அமெரிக்காவின் நாஷ்வில்லேயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி…

அமெரிக்காவின் நாஷ்வில்லேயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி…

by admin

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில் குறித்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் உடனடியாக காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், இருவரும் சுமார் 22 வயது மதிக்கத்தவர்கள் எனவும், இரு வாலிபர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More