குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அரசாங்கம் போர் குற்றங்களை செய்ததா என அமெரிக்க அரசாங்கம் தம்மிடம் கேட்டதாகவும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என அமெரிக்கா கூறியதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமராச்சி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வந்தால், சர்வதேச சமூகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுப்போம். அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வற்புறுத்துகிறோம் எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மே தினக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சி பாடல் ஒளிப்பரப்பட்டதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.