குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மஹிந்த ஆட்சி பீடம் ஏறுவதனை தடுக்கும் நோக்கில் சர்வதேச சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள், தொடர்ந்தும் மைத்திரிபால சிறிசேனவை தமது தலைவராக ஏற்றுக் கொள்வது புரியாத புதிராக அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை மீளவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுமதியுடன் பொது வேட்பாளராக நிறுத்தக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான மக்கள் நல அரசாங்கமொன்று உருவாவதனை தடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவி நாடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்