வட கொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை அண்மையில் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேஇன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் அதில், நேர மண்டலமும் ஒன்றாகும். தென்கொரியாவின் நேரத்தை விட வடகொரியா அரை மணி நேரம் பின்னோக்கி இருந்தநிலையில் வடகொரியா தற்போது தென்கொரியாவுக்கு இணையாக தனது நேர மண்டலத்தை மாற்றியுள்ளது.
அதுவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், தென் கொரிய ஜனாதிபதி முன் ஜே-இல்லும் எதிர்வரும் மே 22-ம் திகதி வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளனர்.
அத்துடன் டிரம்புக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும இடையிலான சந்திப்பு மே அல்லது ஜூன் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கான இடமும், நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது