Home இலங்கை தஞ்­சைக்கு ஈடான நினைவிடம் முள்­ளி­வாய்க்கா­லில் வேண்டும் என்கிறார் மாவை…

தஞ்­சைக்கு ஈடான நினைவிடம் முள்­ளி­வாய்க்கா­லில் வேண்டும் என்கிறார் மாவை…

by admin

முள்­ளி­வாய்க்கா­லில் நாமும் எம் இனத்­தின் விடு­த­லைக்­காய் உயிர் கொடுத்­த­வர்­க ளுக்கு ஒரு நினை­வி­டத்­தைக் கட்­ட­மைக்க வேண்­டும். தஞ்­சை­யில் அமைந்­துள்ள நினை வி­டம் போன்­றா­வது அனை­வ­ருக்­கும் உரித்­தாய் அனை­வ­ரும் நினைவு கூரு­வ­தற்­காய் ஓரி­டத்­தில் ஒன்று கூடி அஞ்­சலி செய்­ய­வும், கண்­ணீர் விட்டு ஆறு­தல் பெற­வும் இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண் டும். அந்த அர்ப்­ப­ணிப்­பு­டன் புனி­தக் கட­மையை நிறை­வு­செய்­ய­வும் அனை­வ­ரும் மே 18இல் ஒன்று கூடுவோம்  என அழைக்­கின்றோம்.

இவ்­வாறு, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை. சோ.சேனா­தி­ராசா கோரியுள்ளார்.

இது தொடர்­பில் அவர் அனுப்பி செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
இலங்­கை­யில் தமிழ்த் தேசத்­தின், தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக பல தசாப்­தங்­க­ளாக நடை­பெற்ற போராட்­டங்­கள், நீதி­யா­ன­தும், நியா­ய­மா­ன­தும், வர­லாற்று நிகழ்வுகளில்  பதிந்­த­வை­க­ளா­க­வும் இருந்து வரு­கின்­றன.

இதற்­கும் மேலாக இலங்­கைப் பிரச்­சினை தொடர்­பில் ஐ.நா. மனித உரி­மைப் பேரவை அறிக்­கை­கள், தீர்­மா­னங்­கள் இலங்­கை­யில் தலை­யீடு செய்து இலங்­கைப் பிரச்­சி­னை­க­ளுக்­குக் குறிப்­பாக தமி­ழி­னப் பிரச்­ச­னைக்­குத் தீர்வை எட்­டு­வ­தற்­கும், உலக சந்­தர்ப்­பத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. அவ்­வ­ள­வுக்கு மேலாக “மே” 18 நினைவு நிகழ்­வு­க­ளும் வர­லாற்று முக்­கி­யம் வாய்ந்­த­தா­கி­யி­ருக்­கின்­றது.

போரால் அழிந்­து­போன குறிப்­பி­டும்­ப­டி­யான இடங்­க­ளை­யும், இடி­பா­டு­க­ளை­யும் கூடப் பல நாடு­க­ளில் அஞ்­ச­லிக்­கும் இட­மா­கப் பாது­காத்து வரு­கின்­ற­னர். அந்­தந்த நாடு­க­ளில் குறித்த ஒரு நாளில் ஒன்­று­கூடி துயர ஒலி எழுப்­பிப் பின் பிரார்த்­தனை செய்து துன்ப துயர நிகழ்வை இத­யத்­தில் வைத்து வணங்­கி­யும், கண்­ணீர் விட்­டும் அஞ்­சலி செலுத்­து­கின்­ற­னர். பக்­கத்­தில் யார் நிற்­கி­றார்­கள் என்று கூடப் பார்ப்­ப­தில்லை.

அந்த நாடு­க­ளில் அந்த நினை­வி­டங்­க­ளில், நினை­வுத் தூபி­க­ளில், கட்­ட­மைப்­புக்­க­ளில் பெயர், காலம், இடம் குறித்­தும் வார்த்­தை­க­ளில், எண்­ணம் முகிழ்ந்தவைகளையும், உண்மை நிகழ்­வு­க­ளை­யும் வர­லாற்று வரி­க­ளை­யும் பதிவு செய்­துள்­ள­னர். நினை­வி­டத்­தில் கட்­ட­மைப்­பில் வரி வடி­வங்­க­ளில், பிரதிமைகளோடு இந்­தத் தினத்­தில் துயர் நிகழ்­வு­க­ளைப் பதிவு செய்­துள்­ள­னர்.

சிறு­வர்­கள், மாண­வர்­கள், முதி­ய­வர்­கள், வலி சுமந்­த­வர்­கள் போரில் ஈடு­பட்டு அங்­கங்­கள் இழந்­த­வர்­கள்­கூட அத்­த­கைய இடங்­க­ளுக்­குச் சென்று பிரார்த்­திப்­ப­தைப் பார்த்­தி­ருக்­கி­றோம். இலங்­கை­யி­லும் தம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அரசு நாடா­ளு­மன்ற முன்­ற­லில் நினை­வி­டம் அமைத்து நினைவு பேணி அஞ்­சலி செலுத்­து­கி­றது.
இந்­தி­யா­வில் தமி­ழ­கத்­தில் தஞ்­சைத் தர­ணி­யில் தமி­ழீ­ழப் போர் நினை­வி­டந் திறந்­த­போ­தும், பெரும் அஞ்­சலி நிகழ்ச்­சி­க­ளி­லும் பழ.நெடு­மா­ற­னோடு அவர் அழைப்­பில் கலந்து கொண்­டி­ருக்­கி­றோம்.

உல­கத் தமி­ழர்­க­ளுக்கு அது ஓர் நினை­வி­டம். போருக்கு முன்­ன­ரும், போர்க் காலத்­தி­லும், பின்­ன­ரும் இரா­ணு­வம் மற்­றும் உள­வுத்­து­றை­யி­னர் தடை­க­ளும் கண்காணிப்புகளும், இரா­ணு­வம் குவிக்­கப்­பட்ட நிலை­க­ளி­லும், அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யி­லும்­கூட கண்­ணீர் அஞ்­ச­லி­க­ளை­யும், சுடர் ஏற்­றும் நிகழ்ச்­சி­க­ளை­யும் ஏற்பாடு  செய்­தி­ருக்­கி­றோம், கலந்­து­கொண்­டி­ருக்­கி­றோம்.

முள்­ளி­வாய்க்­கா­லில் 2009 முதல் எந்த இடத்­தில் பொது இட­மாக, நினை­வி­ட­மாக அஞ்­ச­லி­யைச் செலுத்­த­லாம் என்­பது பற்றி அந்­தப் பிர­தே­சத்­துக்­குச் சென்று ஆராந்திருக்கிறோம். ஓர் இடத்­தைப் பொது இட­மா­க­வும், ஒரு நாளைப் பொது­நா­ளா­க­வும் தீர்­மா­னித்து “மே” 18ஆம் நாள் என்று அறி­வித்­தி­ருக்­கி­றோம். யாருக்­கும் தனியே அந்த இடங்­க­ளில் சொந்­தங் கொள்ள இட­மில்லை. அந்த இடத்­தின் புனி­தம் வித்­து­டல்­க­ளின் விளை­நி­ல­மாய் அந்­தத் தாகத்­தின் எழு­நி­ல­மாய் எழுந்து நின்று ஆத்ம பலத்தை உரு­வாக்­கு­கி­றது.

இன்­னும் ஆன்­மீக நம்­பிக்­கை­யுள்­ளோர் கடல், ஆற்று நீர் நிலை­க­ளுக்­குச் சென்று ஈமக்­க­டன் இயற்­று­ப­வர்­கள், தேவா­ல­யங்­க­ளில், கோவில்­க­ளில் பிரார்த்­தனை செய்வோர்  அனை­வ­ரும் அந்­தக் கட­மை­களை நிறை­வேற்­ற­வும் விதி கொண்­டுள்­ள­னர்.

வலி தாங்கி நிற்­போ­ரும், மனித நேய­மிக்­கோ­ரும், இலட்­சிய தாகங்­கொண்­டோ­ரும், கல்­வி­யா­ளர், மாண­வர், எதிர்­கால இளைய சமு­தா­ய­மும் ஈடு­பாடு கொள்­வது, சங்கமமாவது  காலத்­தின் தேவை­யா­கும். அவர்­கள் முள்­ளி­வாய்க்­கால் நினை­வி­டத்­தில் ஒன்று கூட முத­லில் அழைப்பு விடுத்­தமை மதிக்­கப்­பட வேண்­டும்.

அந்த வேளை­க­ளி­லா­வது எந்­தக் கொள்கை, கோட்­பா­டு­க­ளுக்கு, இலட்­சி­யத்­துக்­காய் உயிர் கொடுத்­தார்­களோ வலி சுமந்­தோமோ அந்த விடு­த­லைக்­காய் அர்ப்பணிப்போம்  என உறுதி எடுக்க வேண்­டு­மெ­ன­வும் அழைப்பு விடுக்­கின்­றோம் – என்­றுள்­ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More