குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிரேக்கம் நோக்கி அதிக எண்ணிக்கையிலான ஏதிலிக் கோரிக்கையாளர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கி – கிரேக்க எல்லைப் பகுதிகளின் ஊடாக இவ்வாறு அதிகளவான ஏதிலிக் கோரிக்கையாளர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.கிரேக்கத்தின் வடகிழக்கு எல்லைப் பகுதியின் ஊடாக சிரிய ஏதிலிக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு கிரேக்கம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கடல் வழிப் பயணங்களின் ஊடாக கிரேக்கத்தை அடையும் பயணிகள், தற்பொழுது தரை வழி எல்லைப் பகுதியை பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2900 பேர் கிரேக்கத்திற்குள் பிரவேசித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரையில் கிரேக்கத்திற்குள் சுமார் ஒரு மில்லியன் ஏதிலிகள் கிரேக்கத்தில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.எவ்ரோஸ் வாவிக்கு அருகாமையில் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஏதிலிகள் கிரேக்கம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.