தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும், நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இளைஞர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியூடாக இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
இந்த மிரட்டலை அடுத்து முதலமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்பு காவல்துறையினரின் வெடிகுண்டு நிபுணர் பிரிவினர் முதலமைச்சரின் இல்லத்தில் சோதனையிட்டதில் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் முதலமைச்சரின் இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அதே எண்ணிலிருந்து அதே நபர் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டியுள்ளார். குறித்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு கடலூரிலிருந்து வந்ததாகத் தெரிய வந்துள்ளநிலையில் மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.