குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கியமான அமைச்சர் ஒருவர் புதையல் தேடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிராமம் ஒன்றை அமைக்கும் போர்வையில் அனுராதபுரம் இபலோகம பிரதேச செயலகத்தின் புகொல்லாகம பலும்கல பகுதியில் தொல்பொருள் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 15 ஏக்கர் காணி டோசர் செய்யப்பட்டுள்ளது.
பெக்கோ இயந்திரமொன்றை பயன்படுத்தி காணிகளை துப்பரவு செய்துள்ளதனால் தொல்பொருள் பெறுமதியுடைய பிரதேசத்தில் காணப்பட்ட விஹாரை ஒன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.புதையல் தோண்டும் நோக்கில் இவ்வாறு காணிகள் துப்பரவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் முக்கிய அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.