184
வடக்கு நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தினுள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அ பல வீடுகளுக்கு தீவைத்துமுள்ளனர்.
இந்த தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்கள், அப்பகுதியில் உடனடியாக ராணுவம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதமும் சுரங்கம் ஒன்றில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love