ஒடிசாவில் கடந்த 3 ஆண்டுகளில் 1,716 பேர் பாம்பு கடியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்ததகவலை சிறப்பு நிவாரண துணை ஆணையாளர் ; பி.ஆர். மொஹாபத்ரா வழங்கிய சிறப்பு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு பேரிடர்களில் 4,689 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்களில் 1,716 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் இது 37 சதவீதம் ஆகும்.
பாம்பு கடிப்பது அந்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க பேரிடர் என மாநில அரசு அறிவித்துள்ளது எனவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்