குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பௌத்த விஹாரைகள் அமைப்பதனை எதிர்ப்பது என்பத வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்த விஹாரைகள் அமைக்கப்படுவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வருவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேசிய பத்திரிகையொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இனவாத அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்hர். பௌத்த மத கோட்பாடுகள் விழுமியங்களின் அடிப்படையில் இந்த நாடு உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அமைப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் பௌத்த விஹாரைகள் அமைப்பதனை எதிர்ப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.