Home இலங்கைகாவல்துறையினர் எனக் கூறி வழிப்பறி

காவல்துறையினர் எனக் கூறி வழிப்பறி

by admin

 

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினர் என கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் நின்ற இருவர் வீதியில் வந்த நபரை வழிமறித்து ,தம்மை காவல்துறையினர் என கூறி அவரது உடமைகளை சோதனையிட்டுள்ளனர்.  அதன் போது அவரது உடைமையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கோப்பாய் காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவல்துறையினர் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More