குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
புதிதாக தெரிவாகியுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக அரசாங்கம் மாதாந்தம் 135 மில்லியன் ரூபாவினை செலவிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 8689 உறுப்பினர்கள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
மேயருக்கு 30000 ரூபாவும், பிரதி மேயருக்கு 25000 ரூபாவும், நகர பிதாகவிற்கு 25000 ரூபாவும், பிரதி நகர பிதாவிற்கு 20000 ரூபாவும். பிரதேச சபைத் தலைவருக்கு 20000 ரூபாவும், பிரதித் தலைவருக்கு 15000 ரூபாவும் மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்பட உள்ளது. இதனைத் தவிர பயண செலவு, தொலைபேசி கட்டணங்கள், முத்திரை கட்டணங்கள் என பல்வேறு வழிகளில் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.