Home இலங்கை2020ம் ஆண்டில் ஐ.தே.க தனித்து ஆட்சி அமைக்கும்…

2020ம் ஆண்டில் ஐ.தே.க தனித்து ஆட்சி அமைக்கும்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


எதிர்வரும் 2020ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி அமைப்பது குறித்து திட்டமிடவில்லை எனவும் 20 – 25 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், அரசாங்கமொன்றை அமைக்கும் பணிகளை தம்மால் தனித்து முன்னெடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன இரண்டாம் நிலை தலைமைகளை உருவாக்கியிருந்தார் எனவும் அதேவிதமாக தாமும் இரண்டாம் நிலை தலைமைகளை உருவாக்க உள்ளதாக குறிப்பிட்ட அவர் , அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More