முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வட மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் நினைவேந்தல் தொடர்பில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இதற்கென குழுவும் நியமிக்கப்பட்டது.
“ எமது இனத்துக்கு ஏற்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் நிகழ்வை எம்முடன் இணைந்து முன்னெடுக்க பொது அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன. நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்த மாகாண சபை உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு எதிர்வரும் 9 ஆம் திகதி கூடும். அதில் முடிவு எடுக்கப்படும் ” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.