இந்தியாவின் 13 மாநிலங்களில் புயல் உருவாகும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக 129 பேர் உயிரிழந்திருந்தநிலையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இவ்வாறு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மேலும் புயல் எச்சரிக்கையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவில் இன்றும் நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் புயலில் இருந்து மக்கள் தங்களையும் தங்களது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அத்துடன் அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.