தென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் எனும் சிந்தனை வட பகுதி மக்களிடம் உள்ளது என இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். வட பகுதி மக்களுக்கும், தென்பகுதி மக்களுக்கும் இடையிலான நல்லுறவு சிதைக்கப்பட்டதாகவும் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தில் வட பகுதி மக்கள் மாத்திரம் அன்றி தென்பகுதி மக்களும் பெரிதும் துன்பப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டையும், மக்களையும் பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட பிரிவினைவாதத்துக்கு எதிராக இராணுவம் போராட நேர்ந்ததாக கூறிய அவர் அதற்காக தமிழ் மக்களை எதிரிகளாக ஒருபோதும் தென்பகுதி மக்களும் சரி, இராணுவமும் சரி எண்ணவே இல்லை எனவும் குறிப்பிட்டார்.
நல்லிணக்க வேலைத் திட்டங்களையே இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் முன்னெடுத்து வருவதாகவும் இதனை தேர்தல் நோக்கத்துக்காகவோ, அரசியலுக்காகவோ செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தா்ர.
யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வறியவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்