172
நடிகையர் திலகம் படத்தில் நடிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் சமந்தா பத்திரிகை நிருபராகவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், அதில் சாவித்ரியின் தோழி சுசீலா கதாபாத்திரத்தில் ஷாலிணி பாண்டேவும், ஜெமினி கணேசனின் முதல் மனைவி கதாபாத்திரத்தில் மாளாவிகா நாயரும் நடித்துள்ளனர். இந்த வீடியோவை நடிகை காஜல் அகர்வால் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மிக்கி ஜே மேயர் இசையமைக்கும் இந்த படத்தில் சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய, பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.
மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். மேலும் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தயாராகி வருகிறது. அண்மையில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் எதிர்வரும்மே 9ஆம் திகதி படம் வெளியாகவுள்ளது. வைஜெயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Spread the love