குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
எதிர்வரும் 2023ம் ஆண்டகளவில் கொழும்பில் முழுமையாக சேரிகள் இல்லாதொழிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் வாழ்ந்து வரும் 70 வீதமான குடும்பங்கள் சேரி வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சேரிகளில் வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த அரசாங்கங்கள் முயற்சி செய்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து நகரங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டளவில் 20000 வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.