Home உலகம்மலேசிய தேர்தலில் மஹதிர் மொஹமட் போட்டியிடுகின்றாரா?

மலேசிய தேர்தலில் மஹதிர் மொஹமட் போட்டியிடுகின்றாரா?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மலேசிய தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் போட்டியிடக்கூடிய சாத்தியம் உண்டு என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 92 வயதான மொஹமட்டை தேர்தலில் களமிறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில்  மொஹமட்டை தேர்தலில் களமிறக்கும் நோக்கிலான பிரச்சார காணொளிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

மஹதிர் மொஹமட் 22 ஆண்டுகளாக மலேசியாவில் பிரதமராக பதவி வகித்துள்ளார். இந்தக் காலப் பகுதியில் மலேசியா பாரியளவில் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து மஹதிர் மொஹமட்டை போட்டியிட செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More