அர்செனல் அணியின் வீரர் லோரன்ற் கோஸ்சியல்னி (Laurent Koscielny ) 6 மாதம் விளையாட்டுக்களில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த லோரன்ற கோஸ்சியல்னி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார். பின்கள வீரரான இவர் கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய லீ்க் போட்டியின் போது அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கெதிரான விளையாடிய போது அவரது குதிக்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து சுமார் 6 மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதனால் எதிர்வரும் 6 மாதங்களுக்கு விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் 2018-19 இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் முற்பகுதியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.