காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வந்த முழு அடைப்பு போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் எனவும் பிரிவினைவாத அமைப்பினர் நேற்று அறிவித்துள்ளனர். காஷ்மீரில் இந்திய இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஜேஆர்எல் என்ற அமைப்பு இந்தப் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. எனினும் ; மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்தும், அமைதிப் பேரணி நடத்தியும் எதிர்ப்பை தெரிவிக்கலாம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது