இலங்கை பிரதான செய்திகள்

மைத்திரி ஓய்வுபெற வேண்டுமா என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதி அல்ல மக்களே….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஓய்வுபெற வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதி அல்ல எனவும் மக்களே அதனை தீர்மானிப்பார்கள் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெறும் எண்ணம் தமக்கில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பீரிஸ் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவின் புகழ் என்ன என்பது கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெளிவானது. மூன்று ஆண்டுகளில் ஜனாதிபதியின் புகழ் 12 வீதத்தால் குறைந்துள்ளது. நாட்டை ஆட்சி செய்த எந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் இந்த நிலைமை ஏற்பட்டத்தில்லை. எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சிறிசேன போட்டியிட்டால், அவருக்கு கிடைக்கும் வாக்குகள் 5 வீதமாக குறையும். இதனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சிறிசேன போட்டியிட மாட்டார் என்பது தெளிவானது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.