177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பாராளுமன்ற அமர்வு குறித்த நிகழ்வு பண விரயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கும் வகையில் பாராளுமன்ற அமர்வின் ஆரம்ப நிகழ்வுகள் நடத்தப்பட்டதாகத் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எந்தவொரு புதிய செயற் திட்டத்தையும் தனது கொள்கை விளக்க உரையில் முன்வைக்கவில்லை எனவும், புதிய பாராளுமன்ற அமர்வு எந்த வகையிலும் நன்மையானதல்ல என சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதனால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love