132
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சார்ஜாவில் சிறைக் கைதிகளினால் வானொலி நிலையமொன்று இயக்கப்பட உள்ளது. இந்த வானொலிச் சேவைக்கு ஸ்டுடியோ அல் அமால் எனப் பெயரிப்பட்டுள்ளது. ரமழான் காலத்தில் சார்ஜா கைதிகளினால் இந்த வானொலிச் சேவை இயக்கப்பட உள்ளது. சார்ஜா ஊடக கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இந்த ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. பிராந்திய வலயத்தில் இவ்வாறான ஓர் வானொலிச் சேவை முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்த வானொலிச் சேவையில் உள்ளுர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love