Home இலங்கை முள்ளிவாய்க்காலில் அஞ்சலிப்போம்- பல்கலை மாணவர்கள் – தோற்றுப் போகும் தமிழ்த் தலைமைகள்…

முள்ளிவாய்க்காலில் அஞ்சலிப்போம்- பல்கலை மாணவர்கள் – தோற்றுப் போகும் தமிழ்த் தலைமைகள்…

by admin

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை நடத்­து­வது என்று நாம் திட்­ட­மிட்­ட­தன் அடிப்படையில் மக்­கள் கனவை நிறை­வேற்­றியே தீரு­வோம். இதற்­கான கலந்­து­ரை­யா­டல் நாளை வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30 மணி­ய­ள­வில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இடம்­பெ­றும்.

பல்­க­லைக்­க­ழக அனைத்­துப்­பீ­டங்­க­ளின் மாண­வர் பிர­தி­நி­தி­கள், சிவில் சமூக அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள், தொழில்­நுட்ப கல்­லூ­ரி­க­ளின் மாணவ பிர­தி­நி­தி­கள் மற்றும்  கோப்­பாய் மற்­றும் பலாலி ஆசி­ரி­யர் கலா­சாலை மாணவ பிர­தி­நி­தி­க­ளும், கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளும் கலந்து கொள்­வார்கள் என்­ப­தைத் தெரிவித்துக் கொள்­கின்­றோம்.

இவ்­வாறு யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் நேற்­றி­ரவு விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் அந்த அறிக்கையில்

தமிழ் இனத்­தின் ஒற்­று­மையை உல­குக்கு எடுத்­துக் காட்ட வேண்­டும் எனும் உயர்ந்த நோக்­கம் கொண்ட சூழ்­நி­லையை உரு­வாக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே மாணவர்களும் பொது மக்­க­ளும் இணைந்து முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் ஏற்­பா­டு­களை செய்த வண்­ணம் உள்­ளோம்.

ஆனால் குறிப்­பிட்ட சில அர­சி­யல்­வா­தி­கள் தமது அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு மாண­வர்­க­ளின் தூர­நோக்­கு­ட­னான செயற்­பா­டு­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்த முனை­கின்­றமை மாணவ சமூ­கம் முன்­னின்று நடத்­து­வ­தா­னது தமது சுய­லாப அர­சி­ய­லுக்­கும் இளைய சமு­தா­யம் அர­சி­யல் விட­யங்­க­ளி­லும் உணர்வு பூர்­வ­மான விட­யங்­க­ளி­லும் நுழைந்து விடக்­கூ­டாது என்று மாண­வர் சமு­தா­யத்­தி­ன­தும் பாதிக்­கப்­பட்ட சமூ­கத்­தி­ன­தும் வேண்­டு­கோளை ஏற்­றுக்­கொள்ள மறுக்­கின்­ற­னர்.

நாம் ஏன் நடத்­து­கின்­றோம்

வடக்கு -– கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் ஏன் இந்த முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை பொறுப்­பேற்க வேண்­டும் என்று சிலர் கேட்­க­லாம். சாத்­வீகப் போராட்டங்களை  இரும்­புக் கரங்­க­ளால் அரசு நசுக்கி விட்­டது. இந்த நிலை­யில் தான் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளி­னால் ஆயு­தப் போராட்­டம் ஆரம்பிக்கப்பட்டு  விசுவாசத்துடனும் அர்ப்­ப­ணிப்­பு­ட­னும் தமிழ் பொது­மக்­களை ஒரே தமி­ழி­ன­மாக ஒன்று திரட்டி தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­காகப் போரா­டி­னார்­கள்.

இதற்­காக அர­சி­யல்­வா­தி­க­ளை­யும் கட்சி வேறு­பா­டின்றி ஒன்­றி­ணைத்து பன்­னாட்டு ஆத­ர­வை யும் பெறத்­தக்­க­வ­கை­யில் போராட்­டத்தை நகர்த்திச் சென்­றி­ருந்­தார்­கள்.

ஆயு­தப் பேராட்­டம் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்டு பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் உத­வி­யு­டன் பேரி­ன­வா­தம் மேற்­கொண்ட கொடிய போரின் விளை­வாக முள்ளிவாய்யால்  மண்­ணில் மௌனிக்­கப்­பட்­டது.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்கு நிக­ராக மக்­களை ஒன்று திரட்ட மக்­களைத் தலைமை தாங்க அது­வும் குறிப்­பாக இந்த முள்­ளி­வாய்க்­கால் பேர­வ­லத்தை ஒழுங்கமைத்து  நடத்­தவோ, தலைமை தாங்­கவோ நீங்­கள் தகு­தி­யு­டை­ய­வர்­களா என்று ஒவ்­வொரு தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளும் குறிப்­பாக வடக்கு மாகாண சபை அங்கத்தவர்களும், உங்­கள் மன­ச்சாட்­சியைக் கேட்­டுக்­கொள்­ளுங்­கள்.

அர­சி­யல் லாபம் தேடு­கி­றார்­கள்…

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் தமது உற­வு­களை இழந்து பல வலி­க­ளைச் சுமந்த தமிழ் மக்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்­டும் என்­பது மாண­வர் சமூ­கத்­தின் வேண்­டு­கோ­ளா­கும். மக்­க­ளின் அர­சி­யல் பிர­தி­நி­தி­க­ ளான தாங்­கள் குறிப்­பாக வடக்கு மாகா­ண­சபை, கிழக்கு மாகாண சபை சார்ந்த அர­சி­யல்­வா­தி­கள் மாண­வர்­க­ளால் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கின்ற இந்த முள்­ளி­வாய்க்­கால் பேர­வல நினை­வேந்­த­லில் மக்­க­ளோடு சேர்ந்து கலந்து கொள்­ளுங்­கள். மாறாக மக்­க­ளின் பேரவலத்தை  சந்­தித்த முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் அர­சி­யல் லாபத்தைத் தேட முயற்சி செய்­யா­தீர்­கள்.

தமி­ழர்­க­ளின் ஒற்­று­மையை தமிழ் மக்­களை எந்­த­வித வேறு­பா­டு­க­ளு­மின்றி ஒன்­றி­ணைந்து முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை நிகழ்த்­து­வ­தன் மூலம் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு ஓர் செய்­தியை எடுத்­துக்­கூற வேண்­டும். அர­சி­யல் கலப்பு இன்றி புனி­த­மாக இந்த அவல நாளை நினை­வுகூர வேண்­டும். மக்­க­ளின் இழப்­பில் எவ­ரும் அர­சி­யல் செய்­யவோ பத­வி­கள் பெறவோ இட­ம­ளிக்­கக் கூடாது.

என்ன கார­ணத்­துக்­காக தமி­ழி­னம் இந்த முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் பேரி­ழப்பைச் சந்­தித்­ததோ அந்த உரி­மையை பெறு­வ­தற்கு அந்த புனி­த­நா­ளில் எந்த களங்­க­மும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. இவற்றை கருத்­திற்­கொண்டு யாழ்­பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் தனது தார்­மீகப் பொறுப்பை உணர்ந்து கொள்­கி­றது.

மாண­வர்­களே அக்­க­றை­யா­ன­வர்­கள்..

தமிழ் மக்­க­ளின் அர­சி­ய­லில் ஏற்­ப­டும் முடி­வு­க­ளில் பெரும் தாக்­கத்தை செலுத்­தத்­தக்க வகை­யில் மாண­வர் ஒன்­றி­யத்­தின் செயற்­பா­டு­கள் காலம்­கா­ல­மாக இருந்து வரு­கின்­றன. தற்­போது இருக்­கும் மந்­த­மான அர­சி­யல் போக்­கி­னால் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை வட­மா­காண சபை­தான் நடத்த வேண்­டும் எனும் முறைமையை  நடை­மு­றைப்­ப­டுத்­தி­னால் அது எதிர்­கா­லத்­தில் தமிழ் மக்­கள் வடக்கு கிழக்கு ரீதி­யாக எழுச்சி கொண்டு தமது உரி­மையை வென்­றெ­டுப்பதை கேள்விக்குறியாக மாற்­றி­வி­டும்.

அர­சி­யல்­வா­தி­க­ளை­விட மக்­கள் பிரச்சி­னை­க­ளில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் அதி­க­ளவு கரி­ச­னை­யோடு ஈடு­பாடு கொண்டு அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்டு வருகிறார்கள். அர­சி­யல் பலம் என்­ப­தற்கு அப்­பால் மாண­வர் சக்தி மாண­வர் ஒன்­று­பட்ட பலத்­தினை கொண்டு மக்­களை ஒருங்­கி­ணைத்து வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாண­வர்­கள் இணைந்து ஒழுங்­க­மைக்­கும் நினை­வேந்தல் நிகழ்வுக்கு வடக்கு மாகா­ண­சபை இடை­யூறு இல்­லா­மல் ஆத­ரவை வழங்க வேண்டும் என்பதற்காக நாம் இரண்டு தட­வை­கள் அலு­வ­லக ரீதி­யாக முத­ல­மைச்­ச­ரைச் சந்­தித்து அன்­பு­ரி­மை­யோடு கேட்­டி­ருந்­தோம்.

ஆனால் மாண­வர்­க­ளா­கிய எமது கோரிக்­கை­யு­டன் உடன்­ப­டா­மல் நிரா­க­ரித்­துக் கொண்­டார். இதன் தொடர்ச்­சி­யாக கடந்த 7ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கலந்துரையாடுவொம் என வரச் சொல்­லி­விட்டு எம்­மோடு எந்­த­வி­தத்­தி­லும் எமது கருத்தை செவி­ம­டுக்­கா­மல் தாம் ஏற்­க­னவே எடுத்­துக் கொண்ட தீர்­மா­னத்தை எமக்குத் தெரி­வித்­த­னர்.

அதன் தொடர்ச்­சி­யாக எமக்கு அவர்­க­ளது தீர்­மா­னத்­தில் உடன்­பாடு இல்­லாத கார­ணத்­தி­னால் நேற்­றுப் புதன்­கி­ழமை நடந்த மாகாண சபை­யின் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் மாநாட்­டில் நாம் கலந்­து­கொள்­ளா­மல் தவிர்த்­தி­ருந்­தோம்.

ஒத்­து­ழைப்பு வழங்­குங்­கள்
கடந்த காலங்­க­ளில் ஏற்­பட்ட விரும்­பத்­த­காத நிகழ்­வு­கள் நடை­பெ­றா­மல் பார்த்­துக் கொள்­ளவே நாம் வட­மா­காண சபை இதனை பொறுப்­பெ­டுத்து நடாத்­து­வது பொருத்தமற்றது என்று கூறி­வ­ரு­கின்­றோம். பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­னர் இந்த நிகழ்வை ஒழுங்­க­மைக்கக் கேட்­ப­தைப் போல் ஒவ்­வொ­ரு­வ­ரும் வந்து கேட்­க­லாம் என்று கூறு­வது சரி­யான பாதையை மாற்­று­வ­தற்­கான செயற்­பா­டா­கவே நாம் கரு­து­கின்­றோம்.

ஆனால் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர் உண்­மையை உணர்ந்து மாண­வர்­க­ளால் ஒழுங்­க­மைக்­கப்­ப­டும் மக்­கள் எழுச்­சிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தை விடுத்து உண்­மைக்கு மாறான தக­வல்­களை வெளி­யி­டு­வ­தை நிறுத்­திக் கொள்ள வேண்­டும்- என்றுள்ளது. –

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More