‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ எனும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இராணுவத்தினரின் கண்டுபிடிப்புக்களை வடக்கு மக்களுக்கு பயன்பெற வைக்கும் நோக்கில் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி இன்றும் நாளையும் நடாத்தப்படுகின்றது. யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இளைஞர்,யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய படைப்புக்களை ஊக்கப்படுத்தும் விதமாக யாழ்.மாவட்டத்திற்குட்பட்ட படைப்பிரிவுகளிலுள்ள இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சுமார் 280ற்கும் மேற்பட்ட புதிய கண்டு பிடிப்புக்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் சென்று பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
படங்கள் செல்வநாயகம் நிரூஜன்
Comments are closed.