பங்களாதேஸ் அணி அவுஸ்திரேலியா சென்று விளையாட இருந்த தொடரை, அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் முதல் செப்ரம்பர் வரை இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது.
குறித்த காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் முக்கியமான கால்பந்து தொடர் நடைபெற இருப்பதனாலும் அதனால் போட்டி ஒளிப்பரப்பு உரிமையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் தொடரை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுயள்ளது. இதன் மூலம் கடந்த 2003-ம் ஆண்டுக்குப்பின்னர் பங்களாதேஸ் அணி அவுஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது