அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் ஜனாதிபதி கிம் ஜோங்-உன் ஆகியோரக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் திகதி நடைபெறும் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
சில மாதங்கள் முன்பு வரை கடுமையான சொற்போரில் ஈடுபட்டு வந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும், அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக நிகழ்ந்த நிகழ்வுகள், மற்றும் ராஜ்ய முயற்சிகளின் விளைவாக தற்போது பேச்சுவார்த்தை வரை வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் எனவும் கிம் ஜாங் உன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.