குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு பயிற்சிகள் , கருத்தரங்குகள் நடத்தப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். நாளைய இளைஞர்கள் இன்றைய மாணவர்கள் எனும் ரீதியில் மாணவர்களுக்கு வீதி ஒழுக்குகள் ,விதிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு பயற்சிகள் , கருத்தரங்குகளை பாடசாலை மட்டத்தில் மேற்கொண்டு வருகின்றோம். அதனால் பாடசாலை மாணவர்கள் வீதி ஒழுங்கு , விதிமுறைகளை அறிந்து கொள்வதன் ஊடாக வீதி விபத்துகளை தடுக்க முடியும் என தெரிவித்தார்.