பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓரு வருடம் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்ரிவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு மட்ட கிரிக்கெட்டில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
கேப் டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியிருந்தமையைடுத்து ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓரு வருடத் தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதிக்கப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியா கிரக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வார்னர் ஆகியோர் அவுஸ்திரேலியா அணிக்காக விளையாட முடியும் என தெரிவித்து வரும் நிலையில் அவர்களுக்கு கழக கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது